Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 11-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி

வரும் 11-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி

By: Karunakaran Fri, 05 June 2020 3:49:56 PM

வரும் 11-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மார்ச் மாதத்திலிருந்தே அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், அங்கு நடைபெரும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் 10-ந்தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

corona threat,allow to pilgrims,tirupati,mount tirupati ,கொரோனா அச்சுறுத்தல்,பக்தர்களுக்கு அனுமதி,சாமி தரிசனம்,திருப்பதி

இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவிக்கையில், வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும், 11-ந்தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் கூறினார்.
மேலும், ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் எனவும், காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையான தரிசிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து திருப்பதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :