Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக்

By: Karunakaran Sun, 07 June 2020 11:50:26 AM

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக்

விர்ச்சுவல் அன்பேக்டு விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்குமுன், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடலுக்கு மாற்றாக கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகின. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, கேலக்ஸி அன்பேக்டு விழா ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

samsung company,galaxy note 20,galaxy fold 2 smartphone,galaxy , சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி நோட் 20,கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்,கேலக்ஸி

கடந்த ஆண்டு சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களை ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்தது. அதேபோல், இந்த ஆண்டும் சாம்சங் அதே தேதியில் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம். மேலும் இந்த நிகழ்வில் நோட் மாடல் தவிர கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படும் எனவும், இதனுடன் மிக மெல்லிய பெசல்கள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.

Tags :