Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் விசா வழங்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் விசா வழங்க நடவடிக்கை

By: Nagaraj Fri, 10 Feb 2023 11:47:14 PM

இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் விசா வழங்க நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கு பரிந்துரை... இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபருக்கு வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்தியர்கள் அமெரிக்கா செல்ல விசா பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. விசா நடைமுறையை மாற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை பல்வேறு பரிந்துரைகளை அமெரிக்க அதிபர் பிடனுக்கு அளித்துள்ளது.

change,us department of state,visa activities, ,அமெரிக்க வெளியுறவுத்துறை, மாற்றம், விசா நடவடிக்கைகள்

சிலிக்கான் பள்ளத்தாக்கில் படிப்பு மற்றும் சுற்றுலாவுக்கு விண்ணப்பித்த இந்தியர்கள் 800 நாட்களுக்கும் மேலாக காத்திருந்த தகவல்களும் அதில் இருந்தன.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, விசா வழங்குவதற்கான வீடியோ நேர்காணல், கூடுதல் கவுன்டர்களைத் திறப்பது, 400 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் காத்திருக்கும் நேரத்தை 2 முதல் 4 வாரங்களாகக் குறைத்தல், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து முதல் முறையாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கு குறிப்பாக B1 (வணிகம்) மற்றும் B2(சுற்றுலா) பிரிவுகளுக்கு, நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் உடனடியாக விசா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Tags :
|