Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்லாந்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் திரவம் தரும் ரோபோ நாய்

தாய்லாந்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் திரவம் தரும் ரோபோ நாய்

By: Karunakaran Tue, 09 June 2020 12:00:10 PM

தாய்லாந்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் திரவம் தரும் ரோபோ நாய்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே சானிடைசர் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாங்காக் நகரில் உள்ள சென்ட்ரல் வேர்ல்ட் மால் என்ற புகழ்பெற்ற வணிக வளாகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுமையான தடுப்பு முறையை கையாளப்பட்டு வருகிறது.

coronavirus,robot dog,thailand,sanitizer,k-9 ,கொரோனா வைரஸ்,ரோபோ நாய்,தாய்லாந்து,சானிடைசர்,கே-9

கே-9 என்ற ரோபோ நாய் மூலம் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளை நன்றாக சுத்தம் செய்ய சானிடைசர் திரவம் தரப்படுகிறது. இந்த ரோபோ நாய் உற்சாகமாக ஒரு அசல் நாய் போலவே வலம் வருவதால், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ரோபோ நாய் 5-ஜி தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து பெட்ரா சக்திதேஜ்பானுபவந்த் என்பவர் கூறுகையில், மக்கள் தங்கள் கைகளை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்து விட்டு, பொருட்களை பார்த்து தெரிவு செய்வதற்கு வசதியாக உள்ளதாகவும், அது மிகவும் அழகாக இருக்கிறது என்று மக்கள் நினைப்பதாவும் தெரிவித்துள்ளார்.

Tags :