Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த நிலைப்பாட்டை கவர்னர் மறுபரிசீலனை செய்ய சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த நிலைப்பாட்டை கவர்னர் மறுபரிசீலனை செய்ய சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

By: Karunakaran Mon, 13 July 2020 1:53:21 PM

இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த நிலைப்பாட்டை கவர்னர் மறுபரிசீலனை செய்ய சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா அதிகம் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்தது.

மாநில அரசின் இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என பல்கலைக்கழக வேந்தரும், மாநில கவர்னருமான பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாது என மாநில அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

sanjay rawat,final semester,governor,reconsider ,இறுதி செமஸ்டர், ஆளுநர், சஞ்சய் ராவத் மறுபரிசீலனை

தற்போது, செப்டம்பர் மாத இறுதிக்குள் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்த முடியாது என மராட்டிய அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தற்போது சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ராஜ்பவனுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்து இருக்கிறது. இது பல்கலைக்கழக தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கவர்னரின் நிலைப்பாடு தவறு என்பதை காட்டுவதற்கான அறிகுறியாகும். எனவே கவர்னர் பல்கலைக்கழக தேர்வுகள் குறித்த தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :