Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நில மோசடி வழக்கில் நள்ளிரவில் சஞ்சய் ராவத்தை கைது செய்த அமலாக்கத் துறையினர்

நில மோசடி வழக்கில் நள்ளிரவில் சஞ்சய் ராவத்தை கைது செய்த அமலாக்கத் துறையினர்

By: Nagaraj Mon, 01 Aug 2022 10:34:21 AM

நில மோசடி வழக்கில் நள்ளிரவில் சஞ்சய் ராவத்தை கைது செய்த அமலாக்கத் துறையினர்

மும்பை: நள்ளிரவில் கைது செய்தனர்... நிலமோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.


சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத். எம்.பி.யான இவர் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆதரவாளராவார். இதனிடையே, நில மோசடி தொடர்பாக சட்டவிரோத பணபரிவர்த்தையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் விசாரணை தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று காலை 7 முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.


இந்த சோதனையின் போது சஞ்சய் ராவத் வீட்டில் வைத்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின்போது ராவத் வீட்டில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

police,enforcement,end,midnight,mumbai,land scam ,காவல், அமலாக்கத்துறை, முடிவு, நள்ளிரவு, மும்பை, நில மோசடி

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் சஞ்சய் ராவத்திடம் நிலமோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.


இந்நிலையில், பல மணி நேர விசாரணைக்கு பின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|