Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ கவச வாகனத்தில் பயணித்த கிறிஸ்மஸ் தாத்தா... சர்ச்சையை கிளப்பியுள்ளது

ராணுவ கவச வாகனத்தில் பயணித்த கிறிஸ்மஸ் தாத்தா... சர்ச்சையை கிளப்பியுள்ளது

By: Nagaraj Mon, 19 Dec 2022 10:26:54 AM

ராணுவ கவச வாகனத்தில் பயணித்த கிறிஸ்மஸ் தாத்தா... சர்ச்சையை கிளப்பியுள்ளது

ரஷ்யா: சர்ச்சையை ஏற்படுத்திய பயணம்... இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் குடில்கள் அமைப்பது வீடுகள், கடைகள், ஆலயங்கள் தோறும் அலங்கார விளக்குகள் அமைப்பது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துஸ் தாத்தா வேடமணிந்து வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல்கள் பாடி வாழ்த்து தெரிவிப்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

war culture,santa claus,armored vehicle,travel,controversy ,போர் கலாச்சாரம், கிறிஸ்மஸ் தாத்தா, கவச வாகனம், பயணம், சர்ச்சை

இந்த நிலையில், ரஷ்யாவில் கிறிஸ்மஸ் தாத்தா, ராணுவ கவச வாகனத்தில் பயணித்துள்ளார். ரஷ்யாவின் பெல்கிரேடு (Belgorod) நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதனால், கிறிஸ்மஸ் தாத்தா சென்ற வாகனம் பனியில் சிக்கி கொண்ட‌தால் அவர், ரஷ்ய ராணுவத்தின் கவச வாகனத்தில் பயணம் செய்த‌தாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன்-ரஷ்யா இடையே பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவில் கிறிஸ்மஸ் தாத்தா, ராணுவ கவச வாகனத்தில் பயணித்தது போர் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதா? என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|