Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி உரை

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி உரை

By: Karunakaran Sun, 01 Nov 2020 08:45:35 AM

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி உரை

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தனது பேச்சில் திருக்குறள், பாரதியார் பாடல்கள், கம்பராமாயணம் போன்ற தமிழின் மகோன்னத இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசுவது வழக்கம். இந்நிலையில் குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி நேற்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியபோது, பாரதியாரின் பாடலை அவர் மேற்கோள் காட்டி பேசினார். அப்போது அவர்,
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற் பிறிதிலேயே
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரது வேறே
பன்னரு முபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே
- என்ற பாரதியாரின் பாடலை அப்படியே சொல்லி அசத்தினார்.

sardar vallabhbhai patel,bhartiyar,modi,gujarat ,சர்தார் வல்லபாய் படேல், பாரதியார், மோடி, குஜராத்

இமயமலை மீதான நமது உரிமை... இந்தப் பாடலில் நமது நாட்டின் அருமை பெருமைகளை பாரதியார் அழகுபட கூறி இருக்கிறார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஒற்றுமைக்கான சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியார் வரிகளை மோடி கூறியதின் மூலம் லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு மோதல் போக்கை கையாளும் சீனாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கெல்லாம் இமயமலை மீதான நமது உரிமையை பறை சாற்றி இருப்பது சிறப்பு.

Tags :
|