Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழரசு கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தேர்வு

தமிழரசு கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தேர்வு

By: Nagaraj Sat, 03 Oct 2020 09:17:03 AM

தமிழரசு கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தேர்வு

சத்தியலிங்கம் தேர்வு... இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

satyalingam,general secretary,tamil nadu party,elected ,சத்தியலிங்கம், பொதுச்செயலாளர், தமிழரசு கட்சி, தெரிவு

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாகவிருந்து வந்தது.

இதனையடுத்து வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம், எம்.ஏ. சுமந்திரன் ஆகிய இருவரில் ஒருவரைப் பொதுச் செயலாளராக நியமிப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே புதிய பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Tags :