Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சத்யராஜின் மகள் திமுகவில் இணை இருப்பதாக தகவல்... ரஜினிக்கு சிக்கல் ஏற்படுமா?

சத்யராஜின் மகள் திமுகவில் இணை இருப்பதாக தகவல்... ரஜினிக்கு சிக்கல் ஏற்படுமா?

By: Monisha Thu, 17 Dec 2020 4:30:31 PM

சத்யராஜின் மகள் திமுகவில் இணை இருப்பதாக தகவல்... ரஜினிக்கு சிக்கல் ஏற்படுமா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது திடீரென நடிகர் நடிகைகள் ஒரு சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிரச்சாரம் செய்வார்கள். அந்த வகையில் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே ஒருசில நடிகர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தும், ஒருசில அரசியல் கட்சிகளில் இணைந்தும் வருகின்றனர்.

அந்த வகையில் ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, ஏற்கனவே ஒரு அரசியல் கட்சியில் சேரப் போவதாக கூறியிருந்த நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

sathyaraj,dmk,divya,rajini,politics ,சத்யராஜ்,திமுக,திவ்யா,ரஜினி,அரசியல்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி களத்தில் இறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு எதிராக சத்யராஜை பிரச்சாரம் செய்ய வைக்க திமுக முயற்சித்து வருவதாக வதந்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தால், அவர் திமுகவுக்கு ஆதரவாகவும் ரஜினிக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சத்யராஜ் பிரச்சாரம் செய்வதால் ரஜினிக்கு சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags :
|
|
|