Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 21-ந் தேதி வானில் நிகழும் அதிசய காட்சி... ஒரே கோளாக காட்சி தரும் சனி மற்றும் வியாழன்

21-ந் தேதி வானில் நிகழும் அதிசய காட்சி... ஒரே கோளாக காட்சி தரும் சனி மற்றும் வியாழன்

By: Monisha Tue, 15 Dec 2020 07:44:12 AM

21-ந் தேதி வானில் நிகழும் அதிசய காட்சி... ஒரே கோளாக காட்சி தரும் சனி மற்றும் வியாழன்

வானில் அவ்வப்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகள் ஏற்படும். அந்தவகையில் வருகிற 21-ந்தேதி அதிசய நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் நெருங்கி ஒரே கோளாக காட்சி அளிக்க உள்ளது. இது வானியல் விஞ்ஞானிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை பிர்லா கோளரங்க இயக்குனரும், விஞ்ஞானியுமான எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

வாயு பெருங்கோள்களான சனியும் வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. வருகிற 21-ந் தேதி மாலை 6 மணி அளவில் மேற்கு வானத்தில் அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்காக குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன. இதனை வெறும் கண்ணால் அனைவரும் பார்க்கலாம். இந்த அபூர்வ நிகழ்வால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

saturn,jupiter,astronomy,miracle,sun. ,சனி கோள்,வியாழன் கோள்,வானியல்,அதிசய காட்சி,சூரியன்

பொதுவாக வியாழன் கோள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி கோள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வேறுபட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றன. சனி கோளும், வியாழன் கோளும் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் என்றாலும், இதேபோன்று மிக நெருக்கத்தில் வந்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. அதற்கு பிறகு மீண்டும் வருகிற 2080-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதிதான் வருகின்றன.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ந்தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியனின் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி இதை நாம் காண இருக்கிறோம் என்று கூறினார்.

Tags :
|