Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

By: Karunakaran Mon, 20 July 2020 4:07:31 PM

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாவுக்கு 84 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சல்மான் பின் அப்துல்லா தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பித்தப்பை கல் காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் பின் அப்துல்லா 2012ம் ஆண்டு பதவிக்கு வந்தார்.

salman bin abdullah,saudi king,hospital,ill health ,சல்மான் பின் அப்துல்லா, சவுதி கிங், மருத்துவமனை, உடல்நலக்குறைவு

2012ம் ஆண்டு பதவிக்கு வரும் முன், இரண்டரை ஆண்டுகள் சவுதி பட்டத்து இளவரசராக இருந்தார். 50 ஆண்டுகளாக ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக பணியாற்றியபோது, அங்கு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

தற்போது சல்மான் பின் அப்துல்லாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், மன்னர் உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சவுதியில் கொரோனா பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :