Advertisement

பெலகாவியில் உள்ள சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு

By: Nagaraj Fri, 30 Dec 2022 10:27:16 PM

பெலகாவியில் உள்ள சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு

பெங்களூரு: பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கர் படத்தின் திறப்பு விழா நடந்தது.


கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் வீர சாவர்க்கர் படம் இடம் பெறுகிறது. கடந்த 19ம் தேதி கர்நாடக சட்டசபையில் காங்கிரசின் எதிர்ப்புக்கு இடையே சாவர்க்கர் படம் திரையிடப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கர் படத்தின் திறப்பு விழா நடைபெற்றது. வீர சாவர்க்கரின் புகைப்படத்தை கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் திறந்து வைத்தார்.

karnataka,programs,unveiled,veera, ,அரசு நிகழ்ச்சி, கர்நாடகா, படம், பாஜக ஆட்சி

பின்னர் அவர் கூறுகையில், “வீர சாவர்க்கர் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். இந்து மக்களின் உரிமைகளுக்காகப் பேசினார்.

அவர் 1950 ஏப்ரல் 4 முதல் ஜூலை 13 வரை இந்த சிறையில் அடைக்கப்பட்டார். சாவர்க்கரின் 99 நாட்களை நினைவுகூரும் வகையில் ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் புகைப்படம் திறக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

Tags :
|