Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவிகளுக்கு மாதந்தோறும் சானிட்டரி நாப்கின் வழங்க திட்டம்

மாணவிகளுக்கு மாதந்தோறும் சானிட்டரி நாப்கின் வழங்க திட்டம்

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:10:40 AM

மாணவிகளுக்கு மாதந்தோறும் சானிட்டரி நாப்கின் வழங்க திட்டம்

சென்னை; சென்னை பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் நிர்பயா நிதியின் கீழ் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்று செயல்பட உள்ளது.

சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அதன்படி, 25,474 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளது.

chennai municipality,notification,schools,sanitary napkin,girls ,சென்னை நகராட்சி, அறிவிப்பு, பள்ளிகள், சானிட்டரி நாப்கின், மாணவிகள்

இத்திட்டமானது எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் செயல்படுத்தப்படும்.

ஒரு மாதத்திற்கு 10 சானிட்டரி நாப்கின்கள் என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 20 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். மேலும், பள்ளிகளில் அவசரத் தேவைகளுக்காக கூடுதலாக ஒவ்வொரு மாதமும் 50 சானிட்டரி நாப்கின்கள் என்ற முறையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 100 சானிட்டரி நாப்கின்கள் தனி அலமாரிகளில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :