Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி குழந்தைகள் கையெழுத்து : திமுக மீது அண்ணமாலை குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி குழந்தைகள் கையெழுத்து : திமுக மீது அண்ணமாலை குற்றச்சாட்டு

By: Nagaraj Sun, 05 Nov 2023 09:41:21 AM

நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி குழந்தைகள் கையெழுத்து : திமுக மீது அண்ணமாலை குற்றச்சாட்டு

கரூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு... தமிழகம் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பள்ளிக் குழந்தைகளை பேருந்துகளில் ஏற்றிச் சென்று நீட்டுக்கு எதிராக கையெழுத்து போட வைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கரூரில் என் மண், என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அவர், காமராஜர் படி, படி, படி என்று கூறியதற்கு மாறாக தற்போது குடி, குடி, குடி என்கிறார்கள் என்றார்.

trekking,annamalai,reading,karur,dandonimalai ,நடை பயணம், அண்ணாமலை, படித்தல், கரூர், தாந்தோணிமலை

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து ஒரு தலைமுறையே அழிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, போலீசார் தன்னுடன் வந்தால் சந்து, பொந்துகளில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கிலோ கணக்கில் கஞ்சாவை பிடித்துத் தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரூர் திருமாநிலையூரில் இருந்து தாந்தோணிமலை வரை நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலையை பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்றனர்.

Tags :
|