Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளில் ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

By: vaithegi Tue, 11 July 2023 1:17:12 PM

பள்ளிகளில் ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் ... தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 -ம் தேதி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்படும். இந்த நிலையில் தமிழக அரசு அன்றைய தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவிட்டு உள்ளது.

இதனை அடுத்து அதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் ஜூலை 15ம் தேதி அனைத்து விதமான பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது

department of school education,educational development day ,பள்ளிக்கல்வித்துறை , கல்வி வளர்ச்சி நாள்


மேலும் காமராஜரின் சிறப்புகளை மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், எனவே இதற்கான செலவினங்களை பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும்.

இதையடுத்து இது குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :