Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்த்தும் நோக்கில் பேரணி நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்த்தும் நோக்கில் பேரணி நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு

By: vaithegi Tue, 30 May 2023 1:13:15 PM

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்த்தும் நோக்கில் பேரணி  நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி ...... அரசு பள்ளிகளில் தரம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்கின்றனர். மேலும் அது மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கு இணையாக கணினி, ஆய்வகம், நூலகம் என்று அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று பயனடைந்து கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து அரசு பள்ளிகளின் தரம் மேம்பாட்டை பார்த்து பல தரப்பினரும் தங்களது குழந்தைகளை பள்ளியில் அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வத்துடன் முன் வருவதை இந்தாண்டு பார்க்க முடிகிறது. நடப்பாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளன .

department of school education,student admission , பள்ளி கல்வித்துறை,மாணவர் சேர்க்கை

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது . வருகிற ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த வேண்டும்.

வருகிற ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் அரசு பள்ளிகளின் 100% அளவிற்கு மாணவர் சேர்க்கை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :