Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க வேண்டும் ... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க வேண்டும் ... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

By: vaithegi Thu, 17 Nov 2022 7:14:27 PM

ஆசிரியர்களுக்கு உடனே  ஊதியம் வழங்க வேண்டும்   ...   பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளி கல்வி இணை இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக சீர்திருத்த காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தர காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததால் சுமார் 20,000 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

school education department,teacher ,பள்ளிக்கல்வித்துறை ,ஆசிரியர்

இதனை அடுத்து அக்டோபர் மாத ஊதியம் 2 வாரங்களாக வழங்கப்படாத நிலையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பள பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பித்து ஊதியம் பெற்று உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளார்.

Tags :