Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு தோல்வியினால் தொடரும் தற்கொலைகள் .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருத்தம்

நீட் தேர்வு தோல்வியினால் தொடரும் தற்கொலைகள் .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருத்தம்

By: vaithegi Fri, 09 Sept 2022 4:16:43 PM

நீட் தேர்வு தோல்வியினால் தொடரும் தற்கொலைகள் ..   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருத்தம்

இந்தியா: இந்த ஆண்டிற்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் அதில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

இந்த நிலையில் இந்த தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (செப் 7) நள்ளிரவு வெளியானது.

தமிழகத்தில் 67,787 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவ மாணவியருக்கு பல அமைச்சர்கள் அறிவுரைகளை கூறி வருகின்றனர். ஆனாலும் தினமும் ஒரு மாணவரின் தற்கொலை செய்தி வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

minister of school education,neet exam , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,நீட் தேர்வு

இதையடுத்து அது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் நீட் தேர்வு தோல்வியினால் உயிரை மாய்த்துக் கொள்வதால் மாணவர்கள் சாதிக்க போவது ஒன்றுமில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் தற்கொலை முடிவால் பெற்றோர்களையும், சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு செல்கின்றனர். அதனால் மாணவ மாணவிகள் அது போல தவறான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். கட்சி வேறுபாடின்றி நீட் விலக்கு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி வரை கொண்டு சென்றுள்ளோம். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் நீட் விலக்குக்கேட்டு வலியுறுத்தி இருக்கிறார். எனவே அதனால் நல்ல முடிவு வரும் என நம்பிக்கையோடு இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.


Tags :