Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுமுறை நீட்டிக்கப்பட்டதை ஈடுசெய்ய, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் .. பள்ளிக்கல்வி அமைச்சர்

விடுமுறை நீட்டிக்கப்பட்டதை ஈடுசெய்ய, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் .. பள்ளிக்கல்வி அமைச்சர்

By: vaithegi Sun, 11 June 2023 11:36:23 AM

விடுமுறை நீட்டிக்கப்பட்டதை ஈடுசெய்ய, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்  ..  பள்ளிக்கல்வி அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. விடுமுறை நீட்டிக்கப்பட்டதை ஈடுசெய்ய, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவிப்பு ...... தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்ததால், பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மே 26-ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை மேலும் தள்ளிவைக்குமாறு பெற்றோர், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறப்பு 2-வது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

வரும் 2023-24-ம் கல்வி ஆண்டில்6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற ஜூன் 14-ம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதன்படி,6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படஉள்ளன. இதற்காக அனைத்து பள்ளிவளாகங்களிலும் தூய்மை பணிகள் உட்பட முன்னேற்பாடுகள் முழு வீச்சில்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

minister of school education,on leave ,  பள்ளிக்கல்வி அமைச்சர்,விடுமுறை


‘முதல் நாளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும். பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற இலவச நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தொடக்கநாளிலேயே பாடங்களை நடத்தாமல், மாணவர்களின் விடுமுறை நிகழ்வுகள் பற்றி கேட்டறிதல் போன்ற உளவியல் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்’ என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று கூறியதாவது:- வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், மாணவர்கள் நலன் கருதி கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.அதனால், பாடங்களை நடத்த ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு கற்றல் சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.

Tags :