Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும் .. பள்ளிக்கல்வி துறை

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும் .. பள்ளிக்கல்வி துறை

By: vaithegi Thu, 15 June 2023 10:14:30 AM

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும்   ..  பள்ளிக்கல்வி துறை


சென்னை:பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், வருகிற 23ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு .... அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 37,391அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

school education department,school management committee meeting ,பள்ளிக்கல்வி துறை , பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

இதையடுத்து இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி கலந்தாலோசிக்க வேண்டும்.

இந்த நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், வருகிற 23-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை கூட்டம் நடத்த வேண்டும் எனவும், 50% பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

Tags :