Advertisement

சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதாக தகவல்

By: Nagaraj Thu, 27 Aug 2020 8:31:24 PM

சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதாக தகவல்

சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

சீனாவின் 31 மாநிலங்கள், மாநகரங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் சின்சியாங் உற்பத்தி மற்றும் ஆக்கப்பணி படைக்குழு, இலையுதிர்கால பாடக்கல்வி திட்டத்தை நிர்ணயித்துள்ளன. இதற்கான பல்வேறு பணிகளும் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகஸ்டு 15 முதல், அக்டோபர் 10 வரை, பல்வேறு பிரதேசங்களின் துவக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை திறக்கப்பட்டு வருகின்றன. சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பள்ளிகள் தற்காலிகமாக இணைய வழிக்கல்வியில் செயல்பட உள்ளன.

china,schools,opening,preventive action,normalcy ,சீனா, பள்ளிகள், திறப்பு, தடுப்பு நடவடிக்கை, இயல்பு நிலை

சீனக் கல்வி அமைச்சகம் பல்வேறு பிரதேசங்களின் பள்ளி துவக்கப் பணிகளுக்கு வழிகாட்டி வருகிறது. நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கான பல்வேறு பணிகளையும் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும். உடல் நலக் கல்வியை நன்றாக வலுப்படுத்தி, சுகாதார இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

சீனாவில் புதிய ரக கொரோனா வைரஸ் பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி, வாழ்க்கை, பள்ளி பன்முகங்களிலும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் இணையதளம் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில், சீனாவின் சில பகுதிகளில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அரசின் பயனுள்ள கண்டிப்பான தடுப்பு நடவடிக்கைகளே கொரோனா தடுப்பில் சீனா வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|