Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றலாம்

இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றலாம்

By: vaithegi Fri, 26 May 2023 10:49:19 AM

இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றலாம்



சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்களின் நலனுக்காக மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது.

அதன்படி 10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த 19-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில், 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 23,971 பேர் தேர்ச்சி பெறவில்லை.

schools can get provisional marks certificate from today , தற்காலிக மதிப்பெண் சான்றிதழை,பொதுத் தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு ஜூன் மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

Tags :