Advertisement

ஏழு மாதங்கள் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

By: Nagaraj Sun, 06 Sept 2020 6:59:16 PM

ஏழு மாதங்கள் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

பாடசாலைகள் திறப்பு... ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், ஏழு மாதங்கள் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உத்தரவின் பேரில் நேற்று (சனிக்கிழமை) மாணவர்கள் புதிய கல்வியாண்டை தொடங்கினர். பாடசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து காணொலி மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஹசன் ரூஹானி,’15 மில்லியன் மாணவர்களின் கல்வி சுகாதார முறையைப் போலவே முக்கியமானது. மோசமான சூழ்நிலையில் கூட நம் நாட்டில் கல்வி மூடப்படாது’ என கூறினார்.

iran,internet application,television,university ,ஈரான், இணைய பயன்பாடு, தொலைக்காட்சி, பல்கலைக்கழகம்

மேலும், பாடசாலைகளில் சுகாதார நடவடிக்கைகளை இராணுவப் படையினரின் நிலைக்கு அமுல்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். ஆனால், மில்லியன் கணக்கான மாணவர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் எனவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதைத் தடுக்குமாறும் மருத்துவ சபைக் குழுவின் உறுப்பினர் அப்பாஸ் அகாசாதே கூறினார்.

ஈரான் இதுவரை இணைய பயன்பாடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தொலைதூரக் கல்வியைப் முன்னெடுத்து வந்தது. தற்போது இளங்கலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த முறை தொடரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags :
|