Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு

By: vaithegi Mon, 13 June 2022 10:26:13 AM

தமிழகத்தில் இன்று 1 முதல் 10-ம் வகுப்பு   வரையிலான  பள்ளிகள் திறப்பு

2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.

பள்ளிகள் தொடங்கிய முதல் ஒரு வாரத்துக்கு பாடத்திட்டங்களை நடத்தாமல், புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கேற்ற போல் ஆசிரியர்களும் தயாராகி வருகின்றனர்.

curriculum,education,schools ,பாடத்திட்டம், கல்வித்துறை , பள்ளிகள்

பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று வார விடுமுறை இறுதி நாளையொட்டி குழந்தைகளுக்கு, பெற்றோர் புத்தகப்பை, சீருடை, காலணி, எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்க அதிக தீவிரம் காட்டினர். இதனால் முக்கிய கடைவீதிகளில் நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்பட இருக்கின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, அவர்கள் முககவசம் அணிந்து வருவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Tags :