Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டன

புதுச்சேரியில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டன

By: Nagaraj Mon, 27 Mar 2023 8:17:04 PM

புதுச்சேரியில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டன

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 மண்டலங்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஒருவகை விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை சமாளிக்க பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விஷக் காய்ச்சலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சளி, காய்ச்சலால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

opening,puducherry,schools,today, ,இன்று, திறப்பு, பள்ளிகள், புதுச்சேரி

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் கூட்டம் அதிகரித்ததால், பள்ளி மாணவர்கள் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டனர். எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அரசு அறிவித்திருந்த விடுமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்பின், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 மண்டலங்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags :
|