Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sat, 02 July 2022 10:33:24 AM

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூலை 4 முதல் கோடை விடுமுறையை கடைபிடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் லடாக்கில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள பள்ளிகளை மூடுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் நேற்று (ஜூலை 2) வெளியிடப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரு பிரிவுகளிலும் உள்ள பள்ளிகளுக்கும் ஜூலை 4 முதல் கோடை விடுமுறை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

schools,holidays ,பள்ளிகள்,விடுமுறை


இதை தொடர்ந்து ஜூலை 4 முதல் துவங்கும் கோடை விடுமுறைகள் அடுத்த 15 நாட்களுக்கு தொடரும் என்று மாவட்ட நீதிபதி ஸ்ரீகாந்த் பாலாசாஹிப் சூசே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், ‘கொரோனா பாதிப்புகள் குறிப்பாக குழந்தைகளிடையே அதிகரித்ததை அடுத்து, நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் நோக்கில் நடவடிக்கையாக லடாக் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.

லடாக்கில் கடந்த 6 நாட்களில் 60க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் காணப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே போல ஜம்மு காஷ்மீர் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘காஷ்மீர் பிரிவு மற்றும் ஜம்மு பிரிவின் குளிர்கால மண்டலத்தில் செயல்படும் அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஜூலை 4 முதல் கோடைக் கால விடுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :