Advertisement

கண்ணூரில் உள்ள பள்ளிகள் இன்று (ஜூலை 7) விடுமுறை

By: vaithegi Thu, 07 July 2022 1:09:05 PM

கண்ணூரில் உள்ள பள்ளிகள் இன்று (ஜூலை 7) விடுமுறை

கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று (ஜூலை 6) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கண்ணூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஜூலை 7) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி கண்ணூர் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் பெய்து வரும் கனமழையானது தொடர்ந்து அழிவை உருவாக்குகிறது. கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கண்ணூரில் உள்ள பள்ளிகள் இன்று (ஜூலை 7) ஒரு நாள் மட்டும் மூடப்படும் எனவும் கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

holidays,schools ,விடுமுறை ,பள்ளிகள்

மேலும் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று வரை அம்மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கர்நாடகாவின் கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக மண் அரிப்பு மற்றும் மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tags :