Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி வரை விடுமுறை

மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி வரை விடுமுறை

By: vaithegi Sat, 16 July 2022 3:58:41 PM

மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி வரை விடுமுறை

மணிப்பூர் : இந்தியா முழுவதுமே கொரோனா 4-ம் அலையின் தாக்கம் உயர்ந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2 தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கும் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தான் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

holiday,manipur ,விடுமுறை,மணிப்பூர்

மேலும், தேனி மாவட்டத்தில் மட்டுமே ஒரே பள்ளியில் பல மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்காலிகமாக அந்த பள்ளியை மூடியுள்ளனர். மேலும், அனைத்து பள்ளிகளிலுமே மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதை அடுத்து மணிப்பூர் மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவுதலின் வீதம் உயர்ந்து வருகிறது. இதனால் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட பல மாணவர்கள் இன்னும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டும்படி மணிப்பூர் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Tags :