Advertisement

புதுவையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி

By: Monisha Wed, 07 Oct 2020 3:30:29 PM

புதுவையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசு கல்வி நிலையங்களை திறக்க அனுமதி அளித்ததையடுத்து புதுவையில் நாளை முதல் மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

10, 12-ம் வகுப்புகள் நாளை முதலும், 9,11-ம் வகுப்புகள் வரும் 12-ந் தேதி முதல் செயல்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறக்கப்போவதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

corona virus,curfew,schools,suspicions,students ,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,பள்ளிகள்,சந்தேகங்கள்,மாணவர்கள்

இதனால் புதுவையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? இல்லையா? என்ற குழப்பம் பெற்றோர்களிடையே எழுந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவு கூறியதாவது:-

"பள்ளிகள் திறப்பது தொடர்பான முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பள்ளிகளை திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகிறது" என தெரிவித்தார். இதனால் திட்டமிட்டபடி நாளை புதுவையில் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

Tags :
|