Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹரியானா மாநிலத்தில் தினசரி காலை 8 மணிமுதல் பிற்பகல் 2.30 வரை பள்ளிகள் திறப்பு

ஹரியானா மாநிலத்தில் தினசரி காலை 8 மணிமுதல் பிற்பகல் 2.30 வரை பள்ளிகள் திறப்பு

By: vaithegi Sun, 03 July 2022 2:27:34 PM

ஹரியானா மாநிலத்தில் தினசரி காலை 8 மணிமுதல் பிற்பகல் 2.30 வரை பள்ளிகள் திறப்பு

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஜூலை 1 முதல் பள்ளி நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பள்ளிகள் செயல்பட தொடங்கி உள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, ஹரியானா அரசு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி நேரத்தை முன்னதாகவே மாற்றியுள்ளது. கோடை விடுமுறைக்கு முன், ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் தினசரி 5 மணிநேரம் மட்டும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

schools,haryana ,பள்ளிகள் ,ஹரியானா

ஹரியானா மாநிலம் முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அனைத்து பள்ளிகள் – அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து வகுப்புகளுக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டு மே 4 முதல் நடைமுறைக்கு வந்தது.

இருப்பினும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags :