Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு

1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு

By: vaithegi Fri, 06 Oct 2023 5:14:30 PM

1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு  2 நாட்களில் பள்ளிகள் திறப்பு


சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த செப்.15ஆம் தேதி தேர்வு தொடங்கியது. பிறகு வகுப்பு மற்றும் பாடவாரியாக கடந்த 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவடைந்த பிறகு செப்டம்பர் 28 முதல் அக்.02 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விடுமுறை மிக குறுகிய நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் இதனை நீட்டிக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. ஆசிரியர்களுக்கு வினாத்தாள் மதிப்பீடு பணி உள்ளது. இதனை முடிக்க கூடுதல் விடுமுறை தேவை என்று கூறினர்.

schools,holidays,students ,பள்ளிகள் ,விடுமுறை ,மாணவர்கள்


எனவே இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டது. 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.09 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 6 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது. இதற்கு அடுத்ததாக 1 – 5ம் வகுப்புகளுக்கான இந்த விடுமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடையவுள்ளது. இதனையடுத்து திங்கட்கிழமை (அக்.09) வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்படும்.

Tags :