Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு .. ஆம்னி பேருந்துகள் , விமான கட்டணம் இரு மடங்காக உயர்வு

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு .. ஆம்னி பேருந்துகள் , விமான கட்டணம் இரு மடங்காக உயர்வு

By: vaithegi Fri, 26 May 2023 1:58:11 PM

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு   ..  ஆம்னி பேருந்துகள் , விமான கட்டணம் இரு மடங்காக உயர்வு

சென்னை: ஜூன் 2-வது வாரம் வரைக்குமான அனைத்து ரயில் டிக்கெட்களும் விற்று தீர்க்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து மற்றும் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி ... தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு வருகின்றனர்.

இதனால், ஜூன் மாதம் 2-வது வாரம் வரைக்கும் ரயில் டிக்கெட் தற்போது முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால், ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

omni buses,airfare ,ஆம்னி பேருந்துகள் , விமான கட்டணம்

அதாவது, திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வரை செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணமாக ரூபாய் 2700 வரைக்கும் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், கோவைக்கான ஆம்னி பேருந்து கட்டணம் ரூபாய் 1400 லிருந்து ரூபாய் 2000 வரைக்கும், தூத்துக்குடி மற்றும் கொச்சிக்கான டிக்கெட் ரூபாய் 3000 வரைக்கும் வசூல் செய்யப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி செல்வதற்கான விமான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும், சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூபாய் 8000 வரையிலும், சென்னையிலிருந்து கோவைக்கு ரூ. 5000 வரையும் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய விமான கட்டணமும் பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags :