Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி ...ஜூலை 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி ...ஜூலை 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Mon, 11 July 2022 5:06:05 PM

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி ...ஜூலை 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிகள் இப்போது அரசியல் நெருக்கடியாக மாறி இருக்கிறது. கடந்த வரலாற்றில் இல்லாத அளவுக்கு இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடிகள் எல்லை மீறி இருக்கிறது. இதனால், அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இப்போது நாடு முழுவதும் கலவரங்களையும், வன்முறைகளையும் தூண்டி இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அந்நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஒரு சில வாரங்களாகவே மூடப்பட்ட பள்ளிகள் ஜூலை 17ம் தேதி வரைக்கும் விடுமுறையை கடைபிடிக்கும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால் நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், தனியார் பாடசாலைகள் அனைத்தும் ஜூலை 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில் 2022 -23ம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பதற்கான தேதிகளையும் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், வரும் 18.07.2022 முதல் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், தனியார் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :