Advertisement

டெல்லியில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

By: vaithegi Wed, 09 Nov 2022 1:48:57 PM

டெல்லியில்  இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

புதுடெல்லி: பள்ளிகள் மீண்டும் திறப்பு .... டெல்லியில் கடந்த வியாழக்கிமை முதல் காற்றின் தரக்குறியீடு 450 வரை எட்டி, சுவாசிக்க தகுதியற்றவை என்ற நிலையை அடைந்தது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

schools,delhi ,பள்ளிகள் ,டெல்லி

அதேபோல் காற்று மாசுவை குறைக்க 50 சதவிகிதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்தது. இதேபோல் தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதன் விளைவாக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக வீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் அரசு ஊழியர்களுகளும் மீண்டும் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :