Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும்; முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்

ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும்; முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்

By: Nagaraj Wed, 20 May 2020 10:37:38 AM

ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும்; முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். முதல்வர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளும் வகையில் பல மாநில அரசுகள் சில அனுமதிகளை வழங்கியுள்ளன. இன்னும் சில மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

schools opening,3rd august,cm,directive,counseling ,பள்ளிகள் திறப்பு, ஆகஸ்ட் 3ம் தேதி, முதல்வர், உத்தரவு, ஆலோசனை

மதுக்கடைகள், சலூன்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,474 ஆக உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தற்போது சற்றே நிலைமை சீரடைந்து வருவதாலும், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் ஆந்திரா முதல்வர் அலுவலகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனையின் முடிவில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Tags :
|