Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும்-மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும்-மந்திரி சுரேஷ்குமார்

By: Karunakaran Wed, 10 June 2020 09:46:52 AM

கர்நாடகத்தில் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும்-மந்திரி சுரேஷ்குமார்

கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படாது என கர்நாடக பள்ளிக் கல்வி துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று உடுப்பிக்கு வந்த அவர், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் கர்நாடகத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், திட்டமிட்டப்படி கர்நாடகத்தில் வருகிற 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும். பி.யூ.சி. மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு வருகிற 18-ந் தேதி நடக்கும். சி.பி.எஸ்.இ. தேர்வுக்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

corona,karnataka,sslc exam,suresh kumar ,கொரோனா வைரஸ், கர்நாடகா,சுரேஷ்குமார்,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

மேலும் அவர், கர்நாடகத்தை பொறுத்தவரை வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், மாநிலத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் கூறினார். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு தான் கர்நாடகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த பள்ளியும் கூடுதல் கட்டணம் செலுத்தும்படி மாணவர்களை வற்புறுத்தக்கூடாது.மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், தங்கள் விருப்பப்படி தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Tags :
|