Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

By: vaithegi Mon, 22 May 2023 3:16:13 PM

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்   ..   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு ,அமைச்சர் திட்டவட்டம் .... தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டு ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படுமா? கோடை வெயில் சற்று தணிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா? என பல கேள்விகள் எழுப்பபட்டது.

department of education,schools ,பள்ளிக்கல்வித்துறை ,பள்ளிகள்

இதையடுத்து இது குறித்து தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது 2023 – 2024 ம் கல்வியாண்டில் பள்ளிகள் அறிவிக்கப்பட்டபடி திறக்கப்படும்.

6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும் 1 – 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என திட்ட வட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :