Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

By: vaithegi Thu, 21 Sept 2023 09:53:33 AM

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

சென்னை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை ... மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

schools,chennai,kanchipuram ,பள்ளிகள் ,சென்னை, காஞ்சிபுரம்

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போன்று செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

சென்னையில் காலை முதலே லேசான மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவித்து உள்ளார்.

Tags :