Advertisement

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்

By: vaithegi Fri, 03 Feb 2023 6:13:30 PM

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்

சென்னை: நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் ...... தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. அதனைஅடுத்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, நவம்பர் மாதம் முழுவதும் பெரும்பாலும் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.

இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல நாட்கள் விடுமுறை விடப்பட்டது. எனவே அந்நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

schools,chennai,college ,பள்ளிகள் ,சென்னை, கல்லூரி

அந்த வகையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை விடப்படுகிறது. மேலும் விடுமுறை அறிவிப்பு குறித்து நாளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும்.

Tags :