Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாநிலங்களில் ஜனவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

இந்த மாநிலங்களில் ஜனவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

By: vaithegi Sat, 21 Jan 2023 5:02:01 PM

இந்த மாநிலங்களில் ஜனவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

சண்டிகர் : பள்ளிகள் மீண்டும் திறப்பு .... வட இந்திய மாநிலங்களில் நடப்பு ஆண்டில் அதிக அளவிலான குளிர் நிலவி கொண்டு வருகிறது. இதனால் வெப்பநிலை மிகவும் குறைந்து மக்களை குளிர் வாட்டி வருகிறது. இதற்காக பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிசம்பர் மாதத்தில் அளிக்கப்பட்டிருந்த குளிர்கால விடுமுறைகள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி, மாணவர்களின் நலன் கருதி ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டது.

schools,chandigarh ,பள்ளிகள் ,சண்டிகர்

எனினும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பள்ளிகள் நடந்து வந்தது. ஜனவரி 21-ம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், சண்டிகர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஜனவரி 23-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக ஜனவரி 15-ம் தேதி முதலாகவே, ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 26ம் தேதி வரை இப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :