Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

By: Karunakaran Thu, 10 Sept 2020 4:47:49 PM

கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் 8 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் பாதிப்படைந்து வருகிறது. கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தி, பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது. கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் போன்ற உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.

scientists,corona virus,infiltrate,brain ,விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ், ஊடுருவல், மூளை

தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது. இதுகுறித்து சான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறுகையில், மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :