Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் தொடங்கியது சென்னை-சிங்கப்பூர் இடையே ஸ்கூட் ஏர்லைன்ஸின் விமான சேவை

மீண்டும் தொடங்கியது சென்னை-சிங்கப்பூர் இடையே ஸ்கூட் ஏர்லைன்ஸின் விமான சேவை

By: Nagaraj Tue, 07 Nov 2023 3:57:34 PM

மீண்டும் தொடங்கியது சென்னை-சிங்கப்பூர் இடையே ஸ்கூட் ஏர்லைன்ஸின் விமான சேவை

மீனம்பாக்கம்: சிங்கப்பூர் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடி இணைப்பு விமானங்கள் இருப்பதால், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை சென்னை – சிங்கப்பூரில் இருந்து தினமும் 12 விமானங்களும், சிங்கப்பூர் – சென்னைக்கு 6 விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு முதல் சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து 158 பயணிகளுடன் ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை வந்தது.

coronavirus,flight service,suspended ,கொரோனா வைரஸ், சுற்றுலாத் தலம், விமான சேவை

சென்னையில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு சிங்கப்பூருக்கு 131 பயணிகளுடன் புறப்பட வேண்டிய அதே விமானம் இன்று தாமதமாக அதிகாலை 1.42 மணிக்கு புறப்பட்டது. இது தினசரி விமானங்களை இயக்குகிறது. இதனால் சென்னை-சிங்கப்பூர்-சென்னை இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சென்னைக்கு புதிய விமான சேவையை தொடங்கியுள்ள ஸ்கூட் ஏர்லைன்ஸ் ஏற்கனவே சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்தால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.

பின்னர், கொரோனா வைரஸின் தாக்கம் தணிந்ததும், தமிழகத்தின் திருச்சி மற்றும் கோவை நகரங்களுக்கு விமான சேவையை தொடங்கியது. ஆனால் சென்னை மட்டும் தொடங்கவில்லை.

தற்போது மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர் இடையே தனது விமான சேவையைத் தொடங்கியுள்ளது ஸ்கூட் ஏர்லைன்ஸ். இது விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :