Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ஸ்காட் அட்லாஸ் ராஜினாமா

டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ஸ்காட் அட்லாஸ் ராஜினாமா

By: Karunakaran Wed, 02 Dec 2020 09:06:07 AM

டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ஸ்காட் அட்லாஸ் ராஜினாமா

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான தனது சிறப்பு ஆலோசகராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணரான ஸ்காட் அட்லாஸ் என்பவரை நியமித்தார்.

ஆனால், பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியலில் முறையான அனுபவம் இல்லாத ஸ்காட் அட்லாசை கொரோனா தொடர்பான ஆலோசகராக நியமித்ததாக டிரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கைகளாக கருதப்படும் முக கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கை அமல்படுத்துதல் ஆகியவற்றை ஸ்காட் அட்லாஸ் கடுமையாக எதிர்த்தார்.

scott atlas,resign,special adviser,trump ,ஸ்காட் அட்லஸ், ராஜினாமா, சிறப்பு ஆலோசகர், டிரம்ப்

இதனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அவர் ஜனாதிபதி டிரம்பை தவறான பாதையில் வழி நடத்துவதாக கண்டனங்கள் வலுத்தன. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் 20-ந்தேதி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகரான ஸ்காட் அட்லாஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜோ பைடன் உருவாக்கியுள்ள புதிய கொரோனா தடுப்பு குழுவுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Tags :
|