Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே கத்திகுத்து தாக்குதல்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே கத்திகுத்து தாக்குதல்

By: Karunakaran Thu, 05 Nov 2020 08:40:47 AM

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே கத்திகுத்து தாக்குதல்

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நேற்று அமெரிக்காவில் வெளியாகின. இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பரபரப்பாக இயங்கியது. இருப்பினும் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு வீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மக்களை மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. இந்த தாக்குதலின் போது மக்கள் அனைவரும் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

stabbed attack,white house,united states,election ,கத்திகுத்து தாக்குதல், வெள்ளை மாளிகை, அமெரிக்கா, தேர்தல்

இருப்பினும் இந்த கத்திகுத்து தாக்குதலில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இருப்பினும் போலீசார் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தால் பங்கு பெரும் பதற்றம் நிலவியது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பெரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :