Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடிய வகை தொற்றுநோயால் கடல் முள்ளெலிகள் பலியாவதாக தகவல்

கொடிய வகை தொற்றுநோயால் கடல் முள்ளெலிகள் பலியாவதாக தகவல்

By: Nagaraj Wed, 24 May 2023 8:15:46 PM

கொடிய வகை தொற்றுநோயால் கடல் முள்ளெலிகள் பலியாவதாக தகவல்

இஸ்ரேல்: கடல் முள்ளெலிகள் பலியாகிறது... செங்கடலில் பரவிவரும் கொடிய வகை தொற்று நோயால், இஸ்ரேலை ஒட்டியுள்ள அகபா வளைகுடாவில் கடல் முள்ளெலிகள் வேகமாக மடிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் கூர்மையான முட்களுடன் கோள வடிவில் காணப்படும் கடல் முள்ளெலிகள், கடற்பாசியை உண்டு வளர்கின்றன. பொதுவாகவே, கடற்பாசிகள் சூரிய வெளிச்சத்தை நீருக்குள் புக விடாமல் தடுப்பதுடன், அவை பவளப்பாறைகள் மீது படிந்து சுவாசிக்க விடாமல் மடியச் செய்கின்றன.

researcher,parasites,hedgehogs,endangered ,ஆராய்ச்சியாளர், ஒட்டிண்ணிகள், முள்ளெலிகள், அழியும் அபாயம்

இத்தகைய கடற்பாசிகளை, கடல் முள்ளெலிகள் உண்டு வாழ்வதால் அது பவளப்பாறைகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுகிறது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக, ஒருவகை ஒட்டுண்ணிகளால் கடல் முள்ளெலிகள் தாக்கப்பட்டு, வேகமாக மடிந்து கரை ஒதுங்கிவருகின்றன. இதனால் அப்பகுதியில் கடற்பாசிகளின் பெருக்கம் அதிகரித்து, காலப்போக்கில் பவளப்பாறைகளும் அழியும் அபாயம் நேர்ந்துள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :