Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வள்ளவிளை கடற்கரையில் தடுப்புச்சுவரை உடைத்து புகுந்த கடல் தண்ணீர்

வள்ளவிளை கடற்கரையில் தடுப்புச்சுவரை உடைத்து புகுந்த கடல் தண்ணீர்

By: Nagaraj Wed, 22 July 2020 9:38:31 PM

வள்ளவிளை கடற்கரையில் தடுப்புச்சுவரை உடைத்து புகுந்த கடல் தண்ணீர்

தடுப்பு சுவரை உடைத்து புகுந்த கடல் தண்ணீர்... வள்ளவிளை கடற்கரையில் கடல் அலை தடுப்பு சுவரை உடைத்து தண்ணீர் புகுந்தததில் ஐந்து வீடுகள் இடிந்து சேதமடைந்தது. வீடுகளை இழந்த மக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனா.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை கிராமங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடல் அலை ஆக்ரோஷமாக காணப்படும். குறிப்பாக குளச்சல், வள்ளவிளை, நீரோடி, ராமன் துறை பகுதிகளில் நேற்று முதல் கடல் அலை அதிகமாக காணப்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

sea rage,kanyakumari,suffering people,houses,rubble damage ,
கடல் சீற்றம், கன்னியாகுமரி, தவிக்கும் மக்கள், வீடுகள், இடிந்து சேதம்

வள்ளவிளை கடற்கரை கிராமத்தில் சீனு, சேவியர், ஜாண். லியோன் ஆகியோரது வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்தது. வீடுகளை இழந்த மக்கள் அவர்களது உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

மேலும் பல வீடுகள் இடியும் நிலை காணப்படுவதால் கடல் அலை தடுப்பு சுவரை கட்டும் பணியை துரிதப்படுத்த கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நேரில் பார்வையிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|