Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இ-பாஸ் இல்லாமல் ஊழியர்களை பணிக்கு வைத்த நகை கடைக்கு சீல்

இ-பாஸ் இல்லாமல் ஊழியர்களை பணிக்கு வைத்த நகை கடைக்கு சீல்

By: Nagaraj Sat, 20 June 2020 10:33:49 PM

இ-பாஸ் இல்லாமல் ஊழியர்களை பணிக்கு வைத்த நகை கடைக்கு சீல்

நகைக் கடைக்கு சீல்... இ-பாஸ் பெறாமல், சென்னையிலிருந்து கோவைக்கு ஊழியர்களை அழைத்துவந்து, தனிமைப்படுத்தாமல் நேரடியாக பணியமர்த்திய தனியார் நகை கடைக்கு வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்தனர்.

கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில், பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் சென்னை கிளையிலிருந்து, 30 ஊழியர்களை இ-பாஸ் இல்லாமல் அழைத்து வந்து பணியமர்த்தியுள்ளதாக, சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று (20ம் தேதி) அந்த நகைக் கடையில் சோதனையிட்டனர். அப்போது, இ-பாஸ் இல்லாமல் ஊழியர்கள் வந்தது உறுதியானது.

corona,experiment,e-pass,jeweler,seal ,
கொரோனா, பரிசோதனை, இ-பாஸ், நகைக்கடைக்கு, சீல்

இதையடுத்து, நகைக்கடையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடைக்கு சீல் வைத்தனர். ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பின், ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 180 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த செய்தியை, படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'சென்னையிலிருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்டவர்களை தனிமைப்படுத்தாமல், நேரடியாகக் கடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால், கடைக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் நாளை கிடைக்கும்' என்றனர்.

Tags :
|
|