Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்று அதிகரித்ததால் டில்லி-காஜியாபாத் எல்லைக்கு சீல்

கொரோனா தொற்று அதிகரித்ததால் டில்லி-காஜியாபாத் எல்லைக்கு சீல்

By: Nagaraj Tue, 26 May 2020 09:03:12 AM

கொரோனா தொற்று அதிகரித்ததால் டில்லி-காஜியாபாத் எல்லைக்கு சீல்

டில்லி - காஜியாபாத் எல்லை மூடல்... காஜியாபாத் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு டில்லி - காஜியாபாத் எல்லையை காஜியாபாத் மாவட்ட நிா்வாகம் மீண்டும் சீல் வைத்துள்ளது.

இது தொடா்பாக காஜியாபாத் மாவட்ட ஆட்சியா் அஜய் சங்கா் பாண்டே பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

சமீப நாள்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. டில்லி - காஜியாபாத் இடையே மக்கள் சென்று வருவதால், கொரோனா தொற்று அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், தலைமை மருத்துவ அதிகாரியின் பரிந்துரையின் பேரில் முன்னா் ஏப்ரல் 26-ஆம் தேதி செய்யப்பட்டது போல டில்லி -காஜியாபாத் எல்லைகளை சீலிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

delhi,ghaziabad,red zone,ordinances,outbreaks ,டில்லி, காஜியாபாத், சிவப்பு மண்டலம், உத்தரவு, அதீத நோய் பரவும்


மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா், வங்கி ஊழியா்கள், ஊடகத்தினா் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோா் மட்டுமே இரு நகரங்கள் இடையே சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுவா். அவா்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமுலில் இருக்கும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜியாபாத் மாவட்ட நிா்வாகம் தகவலின்படி, 'மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொரோனா தொற்று காரணமாக 227 போ பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 இடங்கள் அதீத நோய் பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நகா்ப்புற காஜியாபாத் பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|