Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினிகாந்த் மீதான முரண்பாடு நீங்கியது; சீமான் விளக்கம்

ரஜினிகாந்த் மீதான முரண்பாடு நீங்கியது; சீமான் விளக்கம்

By: Monisha Mon, 05 Oct 2020 11:41:03 AM

ரஜினிகாந்த் மீதான முரண்பாடு நீங்கியது; சீமான் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான முரண்பாடு நீங்கியது என்று நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து அவரது அரசியல் வருகைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 ஆண்டுகளாக ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் திடீரென தற்போது ரஜினி மீதான முரண்பாடு நீங்கியது என்று குறிப்பிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

rajinikanth,politics,conflict,seeman,rule ,ரஜினிகாந்த்,அரசியல்,முரண்பாடு,சீமான்,ஆட்சி

ரஜினி ஒரு தமிழர் அல்ல என்றும் அவர் முதல்வராக கூடாது என்பது தான் தன்னுடைய எதிர்ப்புக்கு காரணம் என்றும் ஆனால் அவர் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என கூறியதில் இருந்தே அவர் மீதான முரண்பாடு நீங்கி விட்டது என்றும் சீமான் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஏற்கனவே பல மேடைகளில் மற்ற மாநிலத்திலவர்கள் இங்கு வாழ்வதற்கும், தொழில் செய்வதற்கும் தடையில்லை என்றும் ஆனால் ஆட்சியை தமிழர் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடனான முரண்பாடு நீங்கிவிட்டதாக சீமான் கூறியதில் இருந்து இனி அவர் ரஜினியை விமர்சனம் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|